டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்க்லிஷ் புதிதாகத் தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், அகர், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஸாம்பா, ஹேஸில்வுட், ஸ்டாய்னிஸ், ஸ்வப்சன், ஜோஷ் இங்லிஷ்.
மாற்று வீரர்கள்: டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ்.