T20 கிரிக்கெட் போட்டி - இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதல்...!

Cricket Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Nov 18, 2022 05:45 AM GMT
Report

இன்று நடைபெற உள்ள இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கிரிக்கெட் போட்டியில் இரு அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

t20-world-cricket-2022-india-zealand

இந்தியா - நியூசிலாந்து நேருக்கு நேர் மோதல்

இன்று மதியம் 12 மணிக்கு இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கிரிக்கெட் போட்டியில் இரு அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

இவ்விரு அணிகளும் T20 உலக கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 9-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருக்கின்றன.

2020-ம் ஆண்டில் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்துள்ளது. அதே போன்று மறுபடியும் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.