ஐசிசி டி20 தரவரிசை - முதலிடம் பிடித்த பாபர் அசாம் ஐந்தாம் இடத்திற்கு சென்ற விராட் கோலி

babarazam t20ranking
By Irumporai Nov 05, 2021 01:20 AM GMT
Report

சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.


இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும் , மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷித் நீடிக்கின்றனர்.

ஐசிசி டி20 தரவரிசை -  முதலிடம் பிடித்த பாபர் அசாம் ஐந்தாம் இடத்திற்கு சென்ற விராட் கோலி | T20 Rankings Babar Azam Returns

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

ஐசிசி டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.