எங்க தோல்விக்கு இது தாங்க காரணம் - ஸ்காட்லாந்து கேப்டன் வேதனை
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 85 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் பும்ராஹ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து வெறும் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் இருந்தே வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த போட்டியில் வெற்றியை விட ரன் ரேட்டே மிக முக்கியம் என்பதால் ஸ்காட்லாந்தின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் இந்திய அணியை வெற்றியை நோக்கி ஈசியாக அழைத்து சென்றனர். ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களும், கே.எல் ராகுல் 19 பந்துகளில் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 6.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இது குறித்து பேசிய ஸ்காட்லாந்து அணியின் கேப்டன், இந்த போட்டியில் நாங்கள் எதிலும் சிறப்பாக செயல்படவில்லை. இது போன்ற போட்டிகள் எங்களை முன்னேற்றி கொள்ள கிடைத்த வாய்ப்பாக தான் பார்ப்பதே ஒரே வழி.
மார்க் இந்த தொடர் முழுவதும் மிக சிறப்பாக விளையாடினார், அவர் தனது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த கடுமையாக முயற்சித்து பல்வேறு விசயங்களை கற்று கொண்டுள்ளார்.
அதே போல் லீஸ்க்கும் இந்த தொடரில் எங்களது பலமாக திகழ்ந்தார், இவர்களால் தான் இந்த தொடரில் நாங்கள் இதுவரை வந்துள்ளோம். லீக்ஸ் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார்.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
