ஐசிசி டி20 ரேங்கிங் - 4 இடங்கள் பின்தங்கிய கோலி: தொடர்ந்து முதலிடத்தில் பாபர் ஆசாம்! ரசிகர்கள் சோகம்
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மூன்று இன்னிங்ஸ் விளையாடி வெறும் 68 ரன்கள் எடுத்ததால் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில் 4 இடம் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளார். மறுபக்கம் கே.எல்.ராகுல், 5 இன்னிங்ஸில் 194 ரன்களை குவித்து பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
அதே போல இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ரோகித், 174 ரன்கள் எடுத்ததால் டி20 ரேங்கிங் பட்டியலில் 15-வது இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேவிட் மலான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ரம் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
டி20 கிரிக்கெட் பவுலர்களுக்குகான ரேங்கிங் பட்டியலில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா, தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, இங்கிலாந்தின் அடில் ரஷீத் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி, வங்கதேச அணியின் ஷகிப்-அல்-ஹசன், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
