நாங்கள் இருவருமே வெற்றியாளர்கள்தான் - டேவிட் வார்னரின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றில் கமெண்ட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லாத அணிகள். அதனால் இந்த போட்டி குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வாழ்த்தி போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தது.
அந்த பதிவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “வார்னர் vs கேன். இவர்கள் இருவரும் SRH அணியிலும் இணைந்து விளையாடி உள்ளனர். இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியவில்லை” என கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு தான் வார்னர், “நாங்கள் இருவரும் வெற்றியாளர்களாக இருப்போம்” என ரிப்ளை செய்துள்ளார்.