டி20 ஓவர் உலக கோப்பை எப்போது? - தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம் !

cricket icc date announce t20 match
By Anupriyamkumaresan Jun 30, 2021 02:29 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்தியாவில் ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருந்த டி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் தேதியை ஐசிசி அறிவித்துள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

டி20 ஓவர் உலக கோப்பை எப்போது? - தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம் ! | T20 Match India Date Announce By Icc

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.

இந்த நிலையில், டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்த சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28-ந் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. கால அவகாசம் அளித்தது.

இதற்கிடையே டி20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு மற்றும் ஓமனில், இந்த போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

டி20 ஓவர் உலக கோப்பை எப்போது? - தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம் ! | T20 Match India Date Announce By Icc

இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர்.