இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்த 5 வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை - ரசிகர்கள் அதிர்ச்சி
டி20 தொடருக்கான உலக கோப்பை தொடர் துபாய் அமீரக்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதிச் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது, இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி தொடரில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை தழுவுவதே இந்திய அணியில் வேலையாக உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக இந்திய அணியை விமர்சித்து வருகிறார்கள். இருந்தபோதும் இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணி 3 டி20 தொடரும் அதனை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதனால் நியூசிலாந்து அணியை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்று இந்திய அணி திட்டம் தீட்டி வருகிறது. இருந்த போதும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் முக்கியமான 5 சீனியர் வீரர்கள் இடம் பெற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருவதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி விளையாடாமல் ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதனை தொடர்ந்து நடைபெற உள்ள ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுவதன் காரணமாகவும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் விராட் கோலி விளையாட மாட்டார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan

இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்க ராசியும் இருக்கா பாருங்க Manithan
