நாங்களும் சண்டைக்கு ரெடி - டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு

ready t20 match bangladesh team
By Anupriyamkumaresan Sep 10, 2021 03:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச கிரிக்கெட் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட உள்ளது.

நாங்களும் சண்டைக்கு ரெடி - டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு | T20 Match Bangladesh Team Ready List Ready

அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

டி.20 உலகக்கோப்பை துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.

இந்தநிலையில், எதிர்வரும் டி.20 டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச கிரிக்கெட் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. வங்கதேச அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்து வரும் மஹ்மதுல்லா ரியாத்தே டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் வங்கதேச அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமிம் ஹூசைன் என்னும் இளம் வீரர், டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ளார்.

நாங்களும் சண்டைக்கு ரெடி - டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு | T20 Match Bangladesh Team Ready List Ready

சவ்மியா ஷர்கர், லிடன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மி, மெஹ்தி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் போன்ற அனுபவ வீரர்கள் அனைவரும் டி.20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டி.20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி; மஹ்மதுல்லாஹ் ரியாத் (கேப்டன்), முகமது நயீம் சேக், சவ்மியா சர்கார், லிடன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹிம், அஃபிஃப் ஹூசைன், நூருல் ஹசன், மெஹ்தி சஹன், நசும் அஹமத், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹமத், முகமது ஷைஃபுதீன், ஷமிம் ஹூசைன்.