டி-20 வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 68ரன்கள் வித்தியாசத்தில் அசத்திய இந்தியா!

Cricket West Indies cricket team Indian Cricket Team T20 World Cup 2022
By Sumathi Jul 30, 2022 05:01 AM GMT
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

IND vs WI 1st T20

 இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று டிரினிடாட் நகரில் உள்ள பிரயன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டி-20 வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 68ரன்கள் வித்தியாசத்தில் அசத்திய இந்தியா! | T20 India Won Against West Indies By 68 Runs

அதன்படி இந்திய வீரர்கள் களமிறங்கினர். அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க ஆட்டக்காரராக சூர்யகுமார் யாதவ் இறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

 வெஸ்ட் இண்டீஸ் தோல்வி

கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார்.ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்ட்யா சொதப்பினாலும் தினேஷ் கார்த்திக் நிலைத்து நின்று ஆடினார். 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இந்தியா 150 ரன்களை கடக்க உதவினார்.

டி-20 வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 68ரன்கள் வித்தியாசத்தில் அசத்திய இந்தியா! | T20 India Won Against West Indies By 68 Runs

இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் களமிறங்கினர். இந்திய பந்துவீச்சாளர்கள் திறம்பட பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நீண்ட களத்தில் நீடிக்கவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் , பிஷ்னோய் , அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளும் , ஜடேஜா , புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.