3வது T20 போட்டி; தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா - இலங்கை இன்று பலபரீட்சை
ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்தியா - இலங்கை இன்று மோதல்
இந்திய சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று T20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் விளையாடுகிறது.
இதில் முதல் T20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியும் .புனேவில் நடைபெற்ற 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் தொடரை வெல்ல போகும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இன்றய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி சாதகமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது .
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்கள் சரியாக சோவிக்கத நிலையில் அணிக்கு அக்சர் படேல் மற்றும் சூர்யா குமார் யாதவ் ஆகியோர்கைகொடுப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது .இப்போட்டி ரசிகர்கள் இடையியே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .