Wow... கால்பந்து விளையாடி மகிழ்ந்த இந்தியா-நியூசிலாந்து அணி வீரர்கள் - வைரலாகும் வீடியோ
இந்தியா-நியூசிலாந்து அணி வீரர்கள் சேர்ந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 உலக கிரிக்கெட் தொடர் -
ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிக்கான போட்டி ரத்து
வெலிங்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கிரிக்கெட் போட்டியில் இரு அணிகள் நேருக்கு நேர் மோத இருந்தது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
கால்பந்து விளையாடி மகிழ்ந்த வீரர்கள்
இந்நிலையில், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட இடைவெளியில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் சேர்ந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvIND pic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022