ரிக்ஷா மாமா வண்டி வருது ஓரம் போ... ஜாலியா ரிக்ஷா ஓட்டிய ஹர்திக் பாண்டியா, வில்லியம்சன் - வைரலாகும் வீடியோ

Cricket Viral Video Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Nov 16, 2022 10:21 AM GMT
Report

டி20 கிரிக்கெட் தொடர் -

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கோப்பை போட்டி வரும்18-ந் தேதி வெலிங்டனில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

t20-cup-2022-cricket-kane-williamson-hardik-pandya

ரிக்ஷா வண்டியை ஓட்டிய கேன் வில்லியம்சன் - ஹர்திக் பாண்டியா

தற்போது, இந்தியா - நியூசிலாந்து தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.

அப்போது, ரிக்ஷா வண்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனும், இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஒய்யாரமாக வண்டி ஓட்டினர்.

இவர்கள் வண்டி ஓட்டி வருவதை அங்கிருந்தவர்கள் வேடிக்கைப் பார்த்து மகிழ்ந்தனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.