இது என் கோப்பை.. தரமாட்டேன்... கேன் வில்லியம்சன் செயலால் சிரித்த ஹர்திக் பாண்டியா..! வைரலாகும் வீடியோ
இது என் கோப்பை.. தரமாட்டேன்... என்று கேன் வில்லியம்சன் செயலால் சிரித்த ஹர்திக் பாண்டியாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 கிரிக்கெட் தொடர் -
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கோப்பை போட்டி வரும்18-ந் தேதி வெலிங்டனில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.
வில்லியம்சன் செய்த செயலால் சிரித்த ஹர்திக் பாண்டியா
தற்போது, இந்தியா - நியூசிலாந்து தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
அப்போது, பலத்த காற்று வீசியதால், டேபிளில் வைக்கப்பட்ட கோப்பை கீழே சரிந்தது. அப்போது, சட்டென கோப்பையை கையில் பிடித்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்... நான் தரமாட்டான்... நான் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று கூறினார்.
இதைக் கேட்டதும் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், புகைப்படக் கலைஞர்களும் சிரித்து விட்டனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிரித்துக் கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
"I'll have that!" ? ? #NZvIND #CricketNation pic.twitter.com/KiQL8IkzUK
— BLACKCAPS (@BLACKCAPS) November 16, 2022