டி20 கிரிக்கெட் போட்டி; மழையால் ஆட்டம் நிறுத்தம்...தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்…!
டி20 உலக கிரிக்கெட் தொடரில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
டி20 உலக கிரிக்கெட் தொடர் -
ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதை தேர்ந்தெடுத்தது.
இதனையடுத்து, நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது, தொடர் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது.
இதன் பின், 3வது டி20 போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கனவே 2வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
#sports: #Cricket#INDvsNZ 3rd #T20I ends in a tie via DLS method.#TeamIndia won the series by 1-0#India’s 3rd consecutive T20I series win against New Zealand.#indvsnzt20 pic.twitter.com/IaVXrhzuCX
— TheNews21 (@the_news_21) November 22, 2022
India won the T20 series 1-0 against New Zealand. pic.twitter.com/4q7iQlgLFo
— Thyview (@Thyview) November 22, 2022