டி20 கிரிக்கெட் : 100 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ், தட்டி தூக்கிய இந்தியா

West Indies cricket team Indian Cricket Team
By Irumporai Aug 07, 2022 07:41 PM GMT
Report

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஹார்த்தி பாண்ட்யா வழி நடத்தினார்

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார்.

டி20 கிரிக்கெட் : 100 ரன்களுக்கு சுருண்ட  வெஸ்ட் இண்டீஸ், தட்டி தூக்கிய இந்தியா | T20 Cricket West Indies Curled Up For 100 Runs

தொடக்க வீரர் இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அணியின் ஸ்கோர் 114 ஆக இருக்கும்போது இந்த ஜோடியை வால்ஷ் பிரித்தார்.

தட்டி தூக்கிய இந்தியா

அவரது பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் விளாசினார். 

இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாத  வெஸ்ட் இண்டீஸ்  அணி 15.4 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இதையடுத்து இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.