5 No Ballலை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங் - இது குற்றம்தான்... ஆனால்... - ஹர்திக் பாண்ட்யா பேட்டி
5 No Ballலை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
முதல் டி20 கிரிக்கெட் தொடர் -
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதனையடுத்து, முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இந்தியாவை வீழ்த்திய இலங்கை
நேற்று 2-வது டி20 போட்டி இரவு 7 மணிக்கு புனே மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க அணியின் வீர்ரகள் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை இலங்கை அணி குவித்தது. இதனையடுத்து 207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இப்போட்டியின் இறுதியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இத்தொடரின் கடைசி போட்டி 7ம் தேதி நடைபெற உள்ளது.
அர்ஷ்தீப் சிங்கிற்கு குவியும் கண்டனங்கள்
இப்போட்டி இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார். அத்துடன், 18 ரன்களையும் வாரி கொடுத்தார். 2 ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங்கை பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டி
இதுகுறித்து கருத்து இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசுகையில், நோ-பால் வீசுவது குற்றம் என்பது எங்களுக்குத் தெரியும். எனினும், 5 நோ-பால் வீசிய அர்ஷ்தீப் சிங்கைக் குறை கூறவில்லை என்றார்.