Wednesday, May 7, 2025

2வது டி20 போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு - அதிர்ச்சியடைந்த வீரர்கள் - வைரலாகும் வீடியோ

Cricket Viral Video Snake Indian Cricket Team
By Nandhini 3 years ago
Report

நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 2-வது டி20 போட்டி - 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளன.

இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டி.20 போட்டி அசாம் மாநிலம், கவுஹாத்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியது.

மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு

இப்போட்டியின் 7-வது ஓவரில் திடீரென மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை பார்த்த தென்னாப்பிரிக்கா வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர்.

பாம்பு செல்லும் பகுதியிலிருந்து வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். பிறகு, பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து எடுத்துச் சென்றனர்.

மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு, மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

t20-2022-cricket-snake-viral-video