டி20 உலக கிரிக்கெட் தொடர் - நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதல்..!
டி20 உலக கிரிக்கெட் தொடரில், நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
டி20 உலக கிரிக்கெட் தொடர் -
ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடந்தது.
இப்போட்டியில், தொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 3வது டி20 போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கனவே 2வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்
3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார்.
20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.