துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு; விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அரசு உறுதிப்படுத்திய பின் பேசுகிறேன் - கனிமொழி

Smt M. K. Kanimozhi Thoothukudi
By Thahir Aug 20, 2022 08:04 AM GMT
Report

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அளித்துள்ள அறிக்கையை அரசு உறுதிப்படுத்திய பின் அது குறித்து பேசுவதாக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.

பரிசு அளித்த கனிமொழி 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி, மற்றும் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் ஆகாயத் தாமரையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது.

இதன் நிறைவு நாள் விழாவானது இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பென்களை பாராட்டி அவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில். நீர் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆகாயத் தாமரையினை அகற்றிடும் விதமாகவும் கழிவுப் பொருளான ஆகாயத் தாமரையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை ஐதராபாத்தைச் சேர்ந்த கிரியேட்டிவ் பீ நிறுவனர் பீனா மூலம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி,

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு; விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அரசு உறுதிப்படுத்திய பின் பேசுகிறேன் - கனிமொழி | T0Hoothukudi Shooting Kanimozhi Speech

திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் கடந்த 6- மாதமாக மகளிர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது பயிற்ச்சியின் போது அவர்கள் ஆகயதாமரையில் இருந்து கூடை, தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கலைநயத்துடன் செய்து அசத்தி உள்ளனர்.

இதனை வெளி நாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்தகட்டமாக எடுக்க உள்ளோம் எனவும்,

இப்போதைக்கு பேச முடியாது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆகாய தாமரை மூலம் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்ச்சிகள் பெண்களுக்கு அளிக்கப்பட இருக்கின்றது என்று தெரிவித்த அவர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை-யின் சில தகவல்கள் வெளியாகி உள்ளது குறித்து அரசு அறிவித்தபின் முழுமையாக கூற முடியும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.