"இரட்டை இலை சின்னம் இருந்தால் வெற்றி பெற்று விடுவார்களா..?’ - டிடிவி தினகரன் பாய்ச்சல்...!
"இரட்டை இலை சின்னம் இருந்தால் வெற்றி பெற்று விடுவார்களா..?’ என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவையும் உறுதி செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது.
டிடிவி தினகரன் பாய்ச்சல்
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
உச்சநீதிமன்ற தீர்ப்பு பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றி தான். இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா? பழனிச்சாமியிடம் இரட்டை இலை வழங்கப்பட்டாலும், அது இன்னும் பலவீனம் அடையும்.