சீரியலில் களமிறங்கும் டி.ராஜேந்தர்! அதுவும் இந்த சர்ச்சைக்குரிய சீரியலா?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான டி.ராஜேந்தர் சீரியலில் நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அடுக்குமொழி வசனங்கள் மூலம் புகழ்பெற்றவர் டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலான “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியலில் டி.ராஜேந்தர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு ஆதாரமாக அந்த சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வெளியான போதே, பலரது எதிர்ப்பையும், கடும் விமர்சனங்களையும் சந்தித்தது, பெண்களை பின்னோக்கி கொண்டு செல்லும் பிற்போக்குத்தனமான ஒன்று என பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.