டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கமல் - வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
மருத்துவமனையில் அனுமதி
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நடிகரும், அவரின் மகனுமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
டி.ராஜேந்திரரை சந்தித்த முதலமைச்சர்
போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்திரரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேல் சிகிச்சை
இதனையடுத்து, டி.ராஜேந்திரரை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனது. இதனால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போனது. தற்போது, டி.ராஜேந்திரனுக்கு விசா கிடைத்துள்ளது.
அமெரிக்கா பயணம்
தன்னுடைய தந்தையின் உயர்சிகிச்சைக்காக அமெரிக்க கூட்டிச் செல்ல அவரது குடும்பத்தினர் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நடிகர் சிம்பு, அவசர அவசரமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சிம்பு அங்குள்ள மருத்துவமனையில் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்.
இன்று மாலை டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட இருக்கிறார். அவரோடு அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி.ராஜேந்திரரை சந்தித்த கமல்ஹாசன்
டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா செல்ல உள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என்று வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இவர்கள் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.