இந்தி அவசியம்....இந்தியில் பேசி அசத்திய டி.ராஜேந்தர் - வைரலாகும் வீடியோ...!
டி.ராஜேந்தர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். இயக்குநர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்ட இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்தியில் பேசி அசத்திய டி.ராஜேந்தர்
இந்நிலையில், ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்ற பான் இந்தியா பாடலின் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசனுடன் இணைந்து, டி.ராஜேந்தர் எழுதி இசை அமைத்து ஒளிப்பதிவு செய்து நடித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் பாடியுள்ள தேசபக்தி ஆல்பத்தை டி.ஆர் ரெக்கார்ட்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து சமீபத்தில் டி.ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
ரூபாய் நோட்டில் கூட அனைத்து மொழிகளும் உள்ளது. நாம் இந்தி இல்லாமல் வாழ முடியுமா? ரயிலில் இந்தி எழுதி இருக்கிறது என்பதற்காக அதில் போகாமல் இருக்கிறோமா. இந்தி அவசியம் என்று பேட்டி கொடுத்தார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியில் பேசி டி.ராஜேந்தர் அசத்தியுள்ளார்.