அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா : பால்வளத்துறையிலிருந்து சா.மு. நாசர் விடுவிப்பு

DMK
By Irumporai May 10, 2023 03:16 AM GMT
Report

அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சா.மு. நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநருடன் சந்திப்பு

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்திதார்.

அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா : பால்வளத்துறையிலிருந்து சா.மு. நாசர் விடுவிப்பு | T R B Raja Becoming A Council Of Ministers

இந்த சந்திப்பினை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா

அதன்படி அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.அவர் வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதுகுறித்த ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து இதற்கான அறிவிப்பினை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.   

அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா : பால்வளத்துறையிலிருந்து சா.மு. நாசர் விடுவிப்பு | T R B Raja Becoming A Council Of Ministers