ஐபிஎல் போட்டியில் தெறிக்கவிட்ட தமிழக வீரர் - ஸ்டம்புகள் சித்ற அவுட்டான வீரர்கள்

Royal Challengers Bangalore Sunrisers Hyderabad TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan Apr 23, 2022 07:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில்  ஹைதராபாத் அணி 9 விக்கெட் vஇத்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் கிரிக்கெட்டின் 36வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி  வீரர்கள் ஹைதராபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட ஹைதராபாத் அணி  8 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே இப்போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் 3 ,முக்கிய விக்கெட்டுகளை அசத்தினார்.  இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.