‘டேய்... உன்ன அடிப்பேன்..’ மனு கொடுக்க வந்தவரை அடிக்க பாய்ந்த அமைச்சர் தா.மோ அன்பரசன் - வைரல் வீடியோ
மனு கொடுக்க வந்தவரை தமிழக அமைச்சர் தா.மோ அன்பரசன் அடிக்க கையை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், வடந்தாங்கல் ஏரியின் புனரமைப்பு பணிகளுக்கான நேற்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.
இதனையடுத்து, பொதுமக்கள், குளம் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது, பொதுமக்கள் பொதுப்பணி துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்று கோரிக்கை வைத்தனர்.
ஏய்.. அடிப்பேன்..
அப்போது, கிராம மக்கள் பேசிக்கொண்டிருந்தப்போது, யாரும் சற்றும் எதிர்பார்க்காத போது, அமைச்சர் தா.மோ அன்பரசன் மனு கொடுக்க வந்த பொதுமக்களுள் ஒருவரை அடிக்க கையை ஓங்கினார். உன்ன... ‘ஏய்.. ஏய் அடிப்பேன்’ என்று கூறினார்.
அமைச்சர் இப்படி நடந்து கொண்ட விதம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விசாரிக்கையில், மனு கொடுக்க வந்தவர்கள் அமைச்சரிடம் முறையாக பேசாமல் ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டிருந்ததால், கையை ஓங்கி அதட்டியதாக கூறப்படுகிறது.