மிக முக்கிய வீரர் இல்லை - வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியில் இருந்து டி.காக்விலகியுள்ளார், தனிப்பட்ட காரணங்களால் டி காக் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் அறிவித்தார்.
இதனால் டி காக்கிற்கு பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் என்னும் வீரர் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதே போல் இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. மெக்காய் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹைடன் வால்ஸ் அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார்.