Liver Cirrhosis: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்
சமீபகாலமாக மக்களிடையே கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படக்கூடிய அபாயம் அதிகரித்திருக்கிறது. இதனால் காலப்போக்கில் கல்லீரல் படிப்படியாக கல்லீரல் மிகப்பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இது பொதுவாக கல்லீரல் நோயின் இறுதி நிலையை குறிக்கிறது.
ஒருவருக்கு கல்லீரல் இழைநார் நோய் ஏற்படுகிறது என்றால் அந்த நபருக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அந்த வகையில் அந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் வழியாக தெரிந்து கொள்ளலாம் அதை பற்றி பார்ப்போம்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அறிகுறிகள்:
1.ஒருவருக்கு இந்த கல்லீரல் இழைநார் பாதிப்பு இருக்கிறது என்றால் அவர்களுக்கு உடல் அளவில் வீக்கம் ஏற்படும். குறிப்பாக கால் பகுதிகளில் வீக்கம் உண்டாகும். இதனால் ஒட்டு மொத்த உடல் நலனையும் அவை பாதிக்கலாம்.
2. அதோடு இந்த கல்லீரல் இழைநார் வளர்சி ஏற்படுகிறது என்றால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை நாம் காணலாம். பலரும் இதனை வேறு ஒரு நோயுடன் தொடர்புபடுத்திக் கொண்டு பார்க்கிறார்கள். அதன் தீவிரம் தெரியாமல் கவனிக்க தவறிவிட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.
3. உடலில் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் உடலில் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவதோடு ஈறுகளில் ரத்தம் வடிதல் மற்றும் உடலில் ஊதா நிறப் புள்ளிகள் அல்லது காயங்கள் போன்றவை ஏற்படலாம்.
4. உங்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படுகிறது என்றால் உடலில் மிகுந்த சோர்வு உண்டாகும். அதிக அளவில் உடல் உழைப்பு இல்லாமலும் உங்கள் உடல் மிகுந்த சோர்வுடன் காணப்படும்.
5. ஒரு சிலருக்கு கல்லீரல் அதிக அளவில் பாதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு ரத்த வாந்தி ஏற்படலாம். இவ்வாறு நடக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சியைத் தடுக்கும் வழிகள்:
இந்த கல்லீரல் இழைநார் வளர்ச்சியைத் தடுக்க நல்ல ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் அவசியம். உணவில் கீரை வகைகள் மற்றும் தானியங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மது மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.
முக்கியமாக உடல் இடையை பராமரிப்பது அவசியம். அடிக்கடி எலுமிச்சை நீர் மற்றும் பூண்டு ஆகியவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் இவை இரண்டும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரலைச் சுத்தப்படுத்த உதவுகின்றன.