தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு தேர்வாக வாய்ப்பு!இன்று முக்கிய ஆலோசனை..

Sylendra Babu Tamilnadu Police DGP
By Thahir Jun 28, 2021 06:35 AM GMT
Report

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

தமிழக டிஜிபி திரிபாதி, வரும் 30 ஆம் தேதி பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். இதனால் புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. டெல்லி யூபிஎஸ்சி அலுவலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில், உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு தேர்வாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு தேர்வாக வாய்ப்பு!இன்று முக்கிய ஆலோசனை.. | Sylendra Babu