வலியில்லாமல் தற்கொலை செய்துகொள்ளவது எப்படி? வந்துவிட்டது பிரத்யேக இயந்திரம்

switzerland legalises painless suicide machine doctor death
By Swetha Subash Dec 07, 2021 01:01 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

சுவிட்சர்லாந்து நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள காப்சியூல் ஒன்றை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது.இதற்கு சுவிட்சர்லாந்து அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் தற்கொலை செய்து கொள்வது தண்டைக்குரிய குற்றமாகவே பார்க்கபடுகிற நிலையில் மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வலிக்கு மத்தியில் உயிர் வாழ்வதற்குப் பதிலாக, தற்கொலை செய்து கொள்ள சில நாடுகள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது.

அப்படி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தும் தற்கொலை செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக அனுமதித்து அதற்காக சவப்பெட்டி வடிவ காப்ஸ்யூல்களை பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.

வலி இல்லாமல் தற்கொலை செய்துக்கொள்வதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்படுள்ள இந்த காப்சியூல் மூலம் ஒரு நிமிடத்திற்குள் வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை ஒருவர் அடைய முடியும் எனக் கூறப்படுகிறது.

வெறும் 30 நொடிகளில் உள்ளே இருப்பவரின் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது. ஆக உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைப்பதன் மூலம் உயிர் பிரியும்.

அதன் பின்னர் உள்ளே இருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிட அடுத்த 5 நிமிடத்தில் உள்ளே இருப்பவரின் உயிர் பிரியும் என காப்சியூலை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

'டாக்டர் டெத்' என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

மக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காப்சியூலை முதலில் பயனாளர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததும் அப்படியே சவப்பெட்டியாகவும் பயன்படுத்தலாம்.

அடுத்தாண்டு முதல் இந்த காப்சியூல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 2 காப்சியூல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது காப்சியூல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.