இந்த நாட்டில் 7 பேர்களில் ஒருவர் கோடீஸ்வரராம்.. எந்த நாடு தெரியுமா?
Switzerland
By Sumathi
7 பேர்களில் ஒருவர் கோடீஸ்வரராக உள்ள நாடு குறித்து தெரிந்துக்கொள்வோம்.
கோடீஸ்வர நாடு
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து ஒரு கோடீஸ்வர நாடு. இங்கு 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக உள்ளனர். பாரம்பரியமாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் சேமிப்பு முறையை பின்பற்றி வருகின்றனர்.
வருமானத்தில் குறைந்தது 30 சதவீதத்தை சேமிக்கும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். தனிப்பட்ட வளர்ச்சிக்காக வருமானத்தில் அதிகபட்சமாக 10% வரை முதலீடு செய்கின்றனர்.
சுவிட்சர்லாந்து
பல்வேறு தளங்களில் முதலீடு செய்வது தான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தொழில்நுட்பம், கல்வி, அறிவு, நிதித்துறை ஆகியவற்றிலும் அவர்களுக்கு அபாரமான அறிவாற்றல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.