பழனியில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி..!
அமெரிக்காவிலிருந்து பழனிக்கு வந்த 41 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
பன்றிக் காய்ச்சல்
அமெரிக்காவிலிருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவர் உறவினர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், லேசான காய்ச்சல் இருந்ததால் பழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் அந்த பெண்மணியை பரிசோதனை செய்த போது, கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கடந்த 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வந்த அவரை, நேற்று மருத்துவர்கள், ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.