ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி ரூ.17 லட்சம் மோசடி - போலீசில் கேரள இளைஞர் புகார்

ops ஓ.பன்னீர்செல்வம்
By Petchi Avudaiappan Oct 07, 2021 07:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை பயன்படுத்தி ரு47 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரளாவை சேர்ந்த இளைஞர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு இடுக்கியில் ஏலக்காய் எஸ்டேட் ஒன்றை வாங்க முயன்றுள்ளார். அந்த தகவலறிந்த கேரளாவை சேர்ந்த பாபு, மகேஷ் ஆகிய இருவரும், தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் என கூறி முருகேசன் என்பவரை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் குறைந்த வட்டியில் ரூ.10 கோடி பணம் பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மூவரும் மதுரை சேடபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும், சேடபட்டி கூட்டுறவு வங்கி தலைவர் எனவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பிரவீனிடம் ஆவண செலவு மற்றும் புரோக்கர் கமிஷனுக்கு எனக்கூறி ரூ.47 லட்சம் பணத்தையும், முத்திரை தாளில் கையெழுத்தும் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் அதன்பின்னர் அவர் பணம் பெற்று தராமல் பிரவீனை ஏமாற்றி வந்ததாகவும், கொடுத்த பணத்தை கேட்டதற்கு தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை ஏமாற்றிய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பிரவீன் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.