நீச்சல்பயிற்சி செய்தவரை காப்பாற்ற சென்றவர் பலி
விருதுநகர் அருகே குளத்தில் மூழ்கிய நபரும் அவரைக் காப்பாற்ற சென்றவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே சென்னால்குடியை சேர்ந்த மோகன் என்ற 6ம் வகுப்பு பள்ளி மாணவன் அருகில் உள்ள அருகே கடம்பன்குளம் கிராமத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நீச்சல் பழகுவதற்காக கடம்பன்குளம் கண்மாயில் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளார்.
அவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த சுந்தர மூர்த்தி (வயது23) என்பவர் நீச்சல் பழகி கொடுத்த நிலையில் மோகன் திடீரென நீரில் மூழ்கியதை தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற சுந்தரமூர்த்தி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரின் உடலை கிராம மக்கள் நீண்ட நேரமாக போராடி மீட்டனர், சம்பவம் குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.