சென்னையில் திடீரென Swiggy ஊழியர்கள் வேலை நிறுத்தம்... - காரணம் என்ன?
சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே வீடுகளிலேயே முடங்கி இருந்த நேரத்தில், உணவு டெலிவரி செய்ய இதுபோன்ற செயலிகளே பெரியளவில் உதவியாக இருந்தன.
ஆனால், டெலிவரி ஊழியர்கள் சில காலமாகவே சில பிரச்சினை எதிர்கொண்டு வருவதாகப் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், Swiggy நிறுவனத்தின் புதிய விதிமுறையால் ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் Swiggy ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னையில் இன்று ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Swiggy நிறுவனத்தில் 12 மணி நேரமாக இருந்த வேலை நேரம் தற்போது 16 மணி நேரமாகவும், வார ஊக்கத்தொகை நிறுத்தியுள்ளதாகவும் ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, Swiggy நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை கண்டித்து சென்னையில் 300க்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.