வீல் சேரில் உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண் : வைரலாகும் வீடியோ
மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீல் சேரில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பல்வேறு சுவாரஸ்யமான வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வழக்கம்.
வைரலாகும் வீடியோ
அதிலும் குறிப்பாக இணையத்தின் வேகத்தினால் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இணையவாசிகளால் மிகவும் அதிகம் விரும்பப்பட்டு, பின்னர் அதிக அளவில் வைரல் ஆக்கப்பட்டும் வருகிறது.

அவ்வகையில் இந்த முறை இணையத்தை கலக்கும் ஒரு வீடியோ காண்போரை மிகவும் நெகிழவைத்துள்ளது. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் உணவு டெலிவரி செய்யச் செல்லும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
வீல் சேரில் உணவு டெலிவரி
அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளி பெண் உணவு டெலிவரி தொழிலாளியான இவரது உழைப்பை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோவில் வீல் சேரில் உணவு டெலிவரிக்குச் செல்லும் ஸ்விகி டெலிவரி பணியாளராக மாற்றுத்திறனாளி பெண் அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன், பெரும்பாலானோருக்கு உத்வேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.