‘’எனக்கு இந்த பதவியே வேண்டாம் ‘’ - பிரதமரான சில மணிநேரங்களில் பதவி விலகிய ஸ்விடன் பிரதமர், என்ன நடந்தது?

pm sweden resign afterappointed
By Irumporai Nov 25, 2021 10:48 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 முன்னாள் நீச்சல் வீராங்கனையாக இருந்து பின்னாளில் அரசியலுக்குள் நுழைந்து படி படியாக அரசியலில் முன்னேறி கடந்த புதன் கிழமையன்று ஸ்வீடன் நாட்டு முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்க பட்டவர் மக்டேலேனா ஆண்டர்சன்.

ஆனால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் மக்டேலேனா. இதற்கு காரணம் அவர் கட்சியிலிருந்து அவரது கூட்டணி கட்சியான க்ரீன் கட்சி விலகியிருப்பதே காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் மக்டேலேனா :

"நான் பதவி விலக விரும்புவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன்.எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாமல் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.

மேலும் "அரசமைப்பின்படி கூட்டணியில் உள்ள ஒரு கட்சி விலகினால் மற்றொரு கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது விதி" எனவும் கூறியிருக்கிறார்.

இப்படி யாரும் எதிர்பாராத விதமாக பதவி ஏற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழல்களுக்கிடையே ஸ்வீடன் அரசியலில் அடுத்ததாக என்ன நடக்க போகிறது என்பதை உலக நாடுகளே உற்றுநோக்கி வருகிறது.