உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது எந்த நாடு தெரியுமா? - அதிகாரப்பூர்வ தகவல்
தங்களுக்கு ராணுவ உதவிகளை யார் வழங்கியது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
நேற்று முதல் தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்த நிலையில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறியது.
மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறிய நிலையில், ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளையும், தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் வழங்கியிருப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.