Saturday, May 31, 2025

அந்த சர்ச்சையில் சிக்கிய நடிகை; படத்தில் ஒப்பந்தம் செய்தபோதே.. - இயக்குநர் ஓபன் டாக்!

Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath 2 years ago
Report

புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்வயம் சித்தா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்வயம் சித்தா

ஜீ 5 இணையதள தொடரான 'ஆட்டோ ஷங்கர்' வெப்சீரிஸ் மூலம் திரையில் தோன்றி அறிமுகமானார் ஸ்வயம் சித்தா. நடிகையாகவும் மாடலாகவும் இருந்து வருகிறார். இவர் 'திரவம்' எனும் மற்றொரு வெப்சீரிஸ் தொடரிலும் நடித்துள்ளார்.

அந்த சர்ச்சையில் சிக்கிய நடிகை; படத்தில் ஒப்பந்தம் செய்தபோதே.. - இயக்குநர் ஓபன் டாக்! | Swayam Siddha Neglecting Movie Promotion

அதுமட்டுமல்லாமல் நடிகர் பிரேம்ஜி நடித்த 'சத்திய சோதனை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்வயம், விக்ரம் ரமேஷ் என்பவர் இயக்கி, கதாநாயகனாக நடித்த 'எனக்கு என்டே கிடையாது' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.

சர்ச்சை

தற்போது இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்வயம் சித்தா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் விக்ரம் ரமேஷ் கூறுகையில் "படத்தில் ஒப்பந்தம் செய்தபோதே படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்தோம்.

அந்த சர்ச்சையில் சிக்கிய நடிகை; படத்தில் ஒப்பந்தம் செய்தபோதே.. - இயக்குநர் ஓபன் டாக்! | Swayam Siddha Neglecting Movie Promotion

ஆனால் சுவயம் சித்தா வரவில்லை. இந்தியன் 2 உள்ளிட்ட இதர பட வேலைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். இனிமேல் பெரிய படங்களில்தான் அவர் நடிப்பார் போலும்'' என்று காட்டமாக விக்ரம் ரமேஷ் தெரிவித்தார்.