அம்மா இருக்கும்போதே படுக்கைக்கு அழைத்த நபர் - வேதனையில் ஜீ தமிழ் நடிகை!
சீரியல் நடிகை ஸ்வாதி ஷர்மா தான் சந்தித்த மோசமான தருணம் குறித்து பேசியுள்ளார்.
ஸ்வாதி ஷர்மா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் ஒன்று நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்வாதி ஷர்மா நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பேட்டி
நான் ஐந்து கன்னட படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும், ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்திருக்கிறேன். ஆனால் என் அம்மா நான் சென்னை போகக்கூடாது என்று கண்டிப்புடன் இருந்தார். ஏனெனில் மொழி பிரச்சனை வந்து விடும் என்பதால்.
ஒரு முறை ஒரு படத்தின் ஆடிஷனுக்காக நானும் அம்மாவும் சென்னை வந்தோம். என் அம்மாவின் முன்னாடியே ஒருவர் வந்து என்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்யச் சொன்னார். நான் அவரை தனியாகக் கூட்டிக்கொண்டு போயி பயங்கரமாக திட்டிவிட்டு அனுப்பிவிட்டேன். பின்னர் எனது அம்மா வந்து என்னிடம் கேட்டார்கள் "அவர் ஏதோ உன்னிடம் கேட்டார் " என்ன கேட்டார் என்று சொல்லு என்கிறார்.
ஆனால் நான் அம்மாவிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டேன். இது என் வாழ்க்கையில் ஒரு மோசமான தருணம். நான் திரைப்படங்களுக்காக முயற்சிக்கும்போது இதுபோல நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது என்று பேட்டியளித்துள்ளார்.