சுவாதி கொலை வழக்கு: சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
சென்னையில் மென்பொருள் பணியாளர் சுவாதி கடந்த 2016 ம் ஆண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுவாதி கொலை வழக்கு
அப்போது சிறையில் அவர் மின்சார கம்பியினைகடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது, ஆனால் ராம் குமாரின் தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தனது விசாரணையினை தொடங்கியது அதில் சிறையில் அடைக்கப்பட்ட ராம் குமார் உண்மையாகவே மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா ?
என்று சுதந்திரமான விசாரணையினை தொடங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
ரூ 10 லட்சம் இழப்பீடு
அதே சமயம் சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது, மேலும் சிறையில் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.