நீண்ட நாட்களாக தலைக்காட்டாத ஸ்வர்ணமால்யா - ஷாப்பிங் போன இடத்தில் ரகளை!
ஸ்வர்ணமால்யா தற்போது தன்னுடைய ஷாப்பிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஸ்வர்ணமால்யா
தொகுப்பாளினி, நடிகை, பரதநாட்டியம் என பன்முகம் கொண்டவர் ஸ்வர்ணமால்யா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். 3 வயது முதல் பரதம் கற்று வந்த ஸ்வர்ணமால்யா, 17 வயதில் பாரதத்திற்கான ’யுவ கலா பாரதி’ என்ற விருதினை பெற்றார்.
மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினிக்கு அக்காவாக பூர்ணி என்ற பாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் தோன்றினார். தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 2002-ல் அர்ஜுன் ராம ராஜன் என்ற அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.
ஷாப்பிங் வீடியோ
கருத்து வேறுபாட்டால் 2004-ல் அவரின் திருமணம் விவாகரத்தானது. அதன்பின் நடிப்பில் இருந்து விலகி பரத நாட்டிய பள்ளி ஆரம்பித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறார். இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கலாசேத்ராவிற்க்குள் எஸ்பிஷன் பார்க்க போயிருக்கிறார்.
அங்கு கலைப் பொருள்கள் மற்றும் பாரம்பரிய பொருட்களை பற்றி தன்னுடைய ரசிகர்களுக்கு விரிவாக விளக்கம் கொடுத்தபடியே, அங்கே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அங்கிருக்கும் நபர்களிடம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பழமொழிகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.