21 வயதில் திருமணம்; அந்த பிரச்சனையால் தற்கொலை முயற்சி - ஸ்வர்ணமால்யா வேதனை!
தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேசியுள்ளார்.
ஸ்வர்ணமால்யா
சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஸ்வர்ணமால்யா. இந்த நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் அழகைப் பார்ப்பதற்காக பல 90ஸ் கிட்ஸ்கள் டிவி முன்பே தவம் கிடந்த காலம் உண்டு.
இதனைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு பகுதி 2, குடும்ப திரை, நிம்மதி உங்கள் சாய்ஸ் என பல டிவி சேனல்களில் புது புது நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருந்தார். தொகுப்பாளராக வலம் வந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து எங்கள் அண்ணா, மொழி, அழகு நிலையம், இங்க என்ன சொல்லுது, புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஸ்வர்ணமால்யா, தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசியதாவது "21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. விவாகரத்திற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. எனக்கு 21 வயசு அவருக்கு 25 வயசுதான். அந்த வயதில் எது சரி, எது தவறு என்று எங்களுக்கு தெரியவில்லை.
அது மட்டுமில்லாமல் எனக்கு அமெரிக்க வாழ்க்கை செட் ஆகவில்லை. அதன் பிறகு நான் ஒரு பெரிய பிரேக் அப் சண்டையில் ஈடுபட்ட போது மிகுந்த மன அழுத்தத்திலிருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.
இது எல்லாம் ஒரு வாழ்க்கையா எதற்கு இப்படி வாழுகிறோம் என்று தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மன அழுத்தத்திற்காக இரண்டு மாதம் மருந்து எடுத்துக்கொண்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.