தன் உயிரை காப்பாற்றிய நபருடன் நட்புடன் பழகும் அன்னப்பறவை: 37 வருடங்களாக தொடரும் அதிசயம்

birds fly garip
By Jon Feb 14, 2021 04:16 AM GMT
Report

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் அதை கொன்றுவிடக்கூடும் என்பதால், அதை வீட்டுக்கு கொண்டு வந்து அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார் Recep Mirzan (63).

சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணமடைந்தாலும், அது Mirzanஐ விட்டு செல்லவில்லை. அதற்கு Garip என்று பெயரிட்டு, தானே வளர்க்க ஆரம்பித்தார் Mirzan. Mirzan அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டு பிரியவில்லை.

தன் உயிரை காப்பாற்றிய நபருடன் நட்புடன் பழகும் அன்னப்பறவை: 37 வருடங்களாக தொடரும் அதிசயம் | Swan Friend Life Mirzan

பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத்தாலும் அதிகபட்சம் 30 ஆண்டுகள்வரைதான் அவை வாழும். ஆனால்,Garip காப்பாற்றப்பட்டே 37 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆக, அது ஒரு அபூர்வஅன்னப்பறவை! Mirzan தனது பண்ணையில் வேலை செய்யும்போது, அவருடனேயே இருக்கிறது Garip.

சொல்லப்போனால், மனைவியை இழந்த Mirzan மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும்போதும் அவருடனேயே நடந்துசெல்லும் Garipஐ இன்னமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். பறந்து செல்ல வாய்ப்பு கிடைத்தும் செல்லாமல் தன்னுடனேயே இருக்கும் Garipஐ தன் சொந்த மகளாகவே பார்க்கிறார் Mirzan.