பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய நித்தியானந்தா : வைரலாகும் வீடியோ

Thai Pongal
By Irumporai Jan 15, 2023 04:31 AM GMT
Report

நித்தியானந்தா தனது சீடர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  சர்ச்சை சாமியார் நித்தியானந்தா

பிரபல சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார். இதனிடையே தான் கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி இருப்பதாக நித்யானந்தா அறிவித்தது பெரும் பேசு பொருளாக மாறியது.

பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய நித்தியானந்தா : வைரலாகும் வீடியோ | Swamy Nithyanandha Celebirate Pongal

இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் நித்தியானந்தா கூறினார். ஆனால் அவர் கூறிய கைலாசா எங்கு இருக்கிறது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பலரும் அதனை தேடி வருகின்றனர்

  வைரலாகும் வீடியோ

இந்த நிலையில், நித்தியானந்தா தனது சீடர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காரில் வந்து இறங்கும் நித்தியானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.