மகள்களுடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்! எதற்கு தெரியுமா?
meet
rajinikanth
sri sri ravinsankar
By Anupriyamkumaresan
நடிகர் ரஜினிகாந்த் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் உடன் இருந்தனர். சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், டப்பிங் பணிகளும் முடித்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திடீரென ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை சந்தித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகவே பரவி வருகிறது.