இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் காலில் விழுந்து வணங்கிய 125 வயதான சுவாமி சிவானந்தா - வீடியோ வைரல்

viral video Swami Sivananda Padma Shri Award 125 years old 125 வயது சுவாமி சிவானந்தா பத்ம ஸ்ரீ விருது
By Nandhini Mar 22, 2022 10:33 AM GMT
Report

டெல்லியில் நேற்று இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நடந்தது.

இந்த விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதில், 125 வயதான சுவாமி சிவானந்தாவுக்கு யோகாவிற்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

விருது பெறுவதற்கு வந்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி இருவரின் முன்பு விழுந்து வணங்கினார். பின்பு சுவாமி சிவானந்தா பத்ம ஸ்ரீ விருது வாங்கும்போது அங்கிருந்த அனைவரும் பெருத்த கரகோஷம் அவரை உற்சாகப்படுத்தினர். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.