பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய விவகாரம் : மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

svsekar femalejournalist
By Irumporai Apr 08, 2022 10:20 AM GMT
Report

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக பதிவிட்ட புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக நடிகரும்,பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டது.இதனையடுத்து,தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகார் தொடர்பான விசாரணையில் நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.தனது தவறுதலுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை எனக் கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து,இந்த வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குறிப்பாக,நான்கு புகார்கள் மீது தனித்தனி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.