அண்ணாமலையின் வாக்கிங் அரசியல் சாயம் வெளுக்குது - எஸ்.வி சேகர் விமர்சனம்

S Ve Sekhar Tamil nadu BJP K. Annamalai
By Karthick Aug 09, 2023 05:42 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அதனை அக்கட்சியை சேர்ந்த எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை பாதயாத்திரை 

9 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியின் சாதனையை மக்களுக்கு விளக்கி கூறும் வகையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் கடந்த 28-ஆம் தேதி நடைப்பயணத்தை துவங்கி மேற்கொண்டு வருகின்றார். தற்போது இந்த பயணம் மதுரை மேலூரை எட்டியுள்ள நிலையில், ஓய்விற்கு பிறகு இன்று மீண்டும் துவங்கியுள்ளது.

sv-sekar-slams-annamalai-pathayathra

சாயம் வெளுத்து வருகிறது 

இந்நிலையில் தான் இதனை அக்கட்சியை சேர்ந்த எஸ்.வி சேகர் விமர்சனம் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து வெளியான செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி, அதனை அவர், சாயம் வெளுகேக்குது என caption இட்டு விமர்சனம் செய்திருக்கிறார்.

தொடர்ந்து, பாஜகவின் நீடிக்கும் உட்கட்சி பூசலின் வெளிப்பாடாக இந்த பதிவு வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.